புதுடில்லி: டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், இன்று( அக்.,15) மாலை 4:08 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது.
இதனால், ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வு டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement