ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 2 விமானத்தில் 471 இந்தியர் நாடு திரும்பினர்

புதுடெல்லி: காசா மீது இஸ்ரேல் போர் தொடுப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தனர். அவர்களை அழைத்து வர, ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்புகிறது.

ஏற்கனவே 2 விமானங்களில் 447 இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில், நேற்று ஒரே நாளில் இரண்டு சிறப்பு விமானங்கள் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தன. மூன்றாவது விமானத்தில் 197 பேர் நேற்று டெல்லி திரும்பினர். அவர்களை மத்திய இணையமைச்சர் கவுசல் வரவேற்று தேசியக் கொடி வழங்கினார்.

நான்காவது சிறப்பு விமானத்தில் 274 பேர் வந்தனர். அவர்களை மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்று தேசியக் கொடி வழங்கினார். நாடு திரும்பிய இந்தியர்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தை செயல்படுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

அதன்பின் அமைச்சர் வி.கே.சிங் அளித்த பேட்டியில், ‘‘ 5-வது சிறப்பு விமானம் நாளை (இன்று) இஸ்ரேலில் இருந்து வருகிறது’’ என்றார்.

ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இது வரை 4 விமானங்களில் 918 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.