வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறாக அமையும் என இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும், போரில், இஸ்ரேல் தரப்பில் 1,300 பேரும், பாலஸ்தீனர்கள் 2,329 பேரும் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேலுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. ஆயுதங்கள் அனுப்பி உதவி செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது: காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் ஆக்கிரமிக்க கூடாது. ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும். மக்களை கேடயமாக பயன்படுத்தும் ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்.
அதே நேரத்தில் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஒருபோதும் ஆக்கிரமிக்கக்கூடாது. பாலஸ்தீனத்துக்கு அதிகாரம் என்பது தேவை. காசாவை ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ளதால் பேரிழப்புகள் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வெளியேற்றம்
வடக்கு காசா பகுதியில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement