வாஷிங்டன்: பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டணி குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் போர் இன்று 9வது நாளை எட்டியது. இந்த போரில், இஸ்ரேல் தரப்பில் 1,300 பேரும், பாலஸ்தீனர்கள் 2,329 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
இது தொடர்பாக, ஆன்டணி குட்டரெஸ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழலில் ஐ.நா., வலியுறுத்தும் 2 மனிதாபிமான கோரிக்கைகள் இவைதான்,
1. பிணைக்கதிகளை நிபந்தனையின்றி ஹமாஸ் உடனே விடுவிக்க வேண்டும்.
2. காசாவில் மனிதாபிமான உதவி செய்வதற்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது. காசாவில் உள்ள பொதுமக்களின் நலனுக்காக உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் ஆன்டணி குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement