ஹனோய்: தென் கிழக்கு ஆசியாவில் உள்ள வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு, ஆறு நாட்கள் அரசு முறை பயணமாக சென்ற, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று வியட்நாம் சென்றடைந்தார்.
வியட்நாமின் பாக் நின் நகரில், நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவு சிலையை, நேற்று திறந்து வைத்தார்.
அதன்பின் அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற காரணமாக அமைந்த கீதாஞ்சலி படைப்பு, வியட்நாமில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ், அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமுக்கு ரவீந்திரநாத் தாகூர், 1929ம் ஆண்டு மூன்று நாட்கள் வருகை புரிந்தார்.
தற்போதுள்ள ஹோ சி மின் நகரில் உரையாற்றிய தாகூர், அந்நாட்டு மக்களிடையே சுதந்திர வேட்கையை துாண்டினார். இதன் வாயிலாக, வியட்நாம் மக்களின் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட பெருமையையும் அவருக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement