சென்னை: அடுத்தடுத்த வெற்றிப்படங்களின் இயக்குநர்களுடன் இணைந்து வித்தியாசமான ஜானர்களில் படங்களை கொடுத்து வருகிறார் சூர்யா. தற்போது இயக்குநர் சிவாவுடன் இணைந்து கங்குவா என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய சூர்யா43 படத்திற்காக சுதா கொங்குரா இயக்கத்தில் இணையவுள்ளார்
