சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகம் – இசையமைப்பாளர் இமான் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இன்று நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு பின் அதிகளவில் வசூலை தரும் நடிகராகவும் உருவெடுத்து வருகிறார். திரையுலகில் இவரது வளர்ச்சி அசாத்தியமானது. அதற்கு அவரின் கடின உழைப்பும் முக்கியம்.

இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என இசையமைப்பாளர் டி.இமான் குற்றம் சாட்டி உள்ளார். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு அறிமுகமான காலக்கட்டத்தில் அவரின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்தவர் இமான். இவர்களின் கூட்டணியில் வெளியான ‛‛மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை'' போன்ற படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இமான் கூறியிருப்பதாவது : சிவகார்த்திகேயன் கூட இனி இணைய வாய்ப்பே இல்லை. இந்த ஜென்மத்தில் அது நடக்காது. அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் தான் காரணம். அது என்னவென்று என்னால் வெளியே சொல்ல முடியாது. அது தனிப்பட்ட விஷயம்.

ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் அவர் நடிகராகவும், நான் இசையமைப்பாளராகவும் பிறந்தால் இணைய வாய்ப்பு உள்ளது. இது நான் மிகவும் கவனமாக எடுத்த முடிவு. அவர் செய்த துரோகம் எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. இதுபற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். அவர் கூறிய பதிலை என்னால் சொல்ல முடியாது”.

இவ்வாறு டி.இமான் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் மீது இமான் கூறிய இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆனது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.