வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் : சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான அசம்கானின், மனைவி , மகன்களுக்கு ஆகியோருக்கு செஷன்ஸ் கோர்ட் 7ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
உ.பி., மாநில பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான அசம்கான்., இவர் மீது ஏற்கனவே பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.அறக்கட்டளை நடத்தி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் கடந்த மாதம் இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் தனது உறவினர் அப்துல்லா அசம்கான் என்பவர் வெளிநாடு செல்ல உதவிட வேண்டி கடந்த 2012-ம் ஆண்டு போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இது தொடர்பாக செஷன்ஸ்கோர்ட்டில் நடந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அசம்கான், இவரது மனைவி, மகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement