இந்தியாவில், கென்ய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Basil Mwambingu Mwakale (2023 அக்டோபர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள கென்ய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் கர்னல் Basil Mwambingu Mwakale, இலங்கைக்கான கென்ய பாதுகாப்பு ஆலோசகராகவும் உள்ளார், மேலும் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் கடற்படைத் தளபதி மற்றும் கென்ய பாதுகாப்பு ஆலோசகருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.