நாட்டு மக்களின் மன உணர்வுகளுடன் ஒத்துப்போகும் தேர்தல் முறையொன்றை அண்மையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதி அமைச்சர் நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மற்றும் பொதுத் தேர்தல் இதுவரை நடாத்தப்படாமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு விருப்பமான துறைசார்ந்தவர்கள் மற்றும் அறிவாளிகள் காணப்படுவதாகவும் அவர்களும் எதிர்காலத்தில் நாட்டிற்காக பணியாற்றக் கூடியதான புதிய தேர்தல் முறை தொடர்பாக நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இப்புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி பாராளுமன்றம் அப்பொறுப்பை நிறைவேற்றும் என்று நீதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய நீதி அமைச்சர்;
உண்மை தொடர்பான பொறுப்புக்களை தான் எடுப்பதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை முன்வைத்து அதன் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கிறேன்.
“21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம், தேர்தல் செலவு ஒழுங்கப்படுத்தல் சட்டம், போன்று ஊழல் தடுப்புச் சட்டம் குறித்தும் அதன் உண்மைத் தன்மை பற்றி வாதிட்டாலும் அச்சட்டங்கள் 3ம் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டத்திற்கும் இது சவாலாக அமைந்தது.
.ஊழலை நிறுத்தி இவ்வாறான தேர்தல் முறையைக் கொண்டுவருமாறு நாம் கூறுகின்றோம். நாமே இந்தப் பாராளுமன்றத்திற்கு இச்சட்டங்களை கொண்டு வருவோம். இந்த நாட்டு மக்களுக்குத் தெரியும் இந்த நாட்டிற்கு அவசியமான தேர்தல் முறை என்ன? அப்பொறுப்பை பாராளுமன்றம் நிறைவேற்றும் வரை மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்” எனத் தெளிவுபடுத்தினார்.