ஹீரோ ஜூம் 125 அல்லது Xude ஸ்கூட்டரின் காப்புரிமை படங்கள் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற ஜூம் 110 மாடலின் அடிப்படையில் 125சிசி என்ஜின் பெற உள்ள மாடலுக்கு டிசைன் காப்புரிமை பெற்ற ஜூம் 125 அல்லது Xude என்ற பெயரை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

ஜூம் 110 மாடலை போலவே காப்புரிமை பெற்ற படம் அமைந்திருந்தாலும், வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி, பாடி பேனல்கள், ஹெட்லைட் என பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ளது.

Hero Xude

விற்பனையில் உள்ள ஜூம் 110 ஸ்கூட்டரின் அடிப்படையான வடிவமைப்பினை பகிர்ந்து கொள்ள உள்ள 125சிசி என்ஜின் பெற உள்ள ஜூடு 125 ஆனது புதுதுபிக்கப்பட்ட ஹெட்லைட், நேர்த்தியான பேனல்கள் ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்தும் அமைப்பினை கொண்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக ஹீரோ சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள் வெளியான நிலையில், பின்புறத்தில் 14 அங்குல வீல் பெற்றிருந்தது. அதே போல காப்புரிமை கோரிய படத்திலும் சற்று பெரிய வீல் உள்ளது.

ஹீரோ விற்பனை செய்து வருகின்ற மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் டெஸ்டினி பிரைம் போன்றவற்றில் உள்ள  ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 hp பவரினை 7000 rpm-ல் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 rpm-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்த என்ஜினை ஹீரோ ஜூம்  Xude 125 பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. கூடுதலாக ஹீரோ நிறுவனம், சமீபத்தில் Xude என்ற பெயரை காப்புரிமை கோரியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.