சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியானது. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் முதல் LCU படமாக லியோ உருவாகியுள்ளது. இதனால் இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு, விஜய்க்காக லோகேஷ் நிறைய விட்டுக்கொடுத்துவிட்டதாக லியோவுக்கு விமர்சனம் செய்துள்ளார்.