Tamil News Today Live: பங்காரு அடிகளார் மறைவுக்கு ஆளுநர் ரவி இரங்கல்!

“’அம்மா’ பங்காரு அடிகளார் மறைந்ததில் ஆழ்ந்த வருத்தமடைகிறேன். மிகவும் பண்பட்ட ஆன்மா மற்றும் சிறந்த ஆன்மிக ஆசிரியராகத் திகழ்ந்தவர். கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் அவரது பங்களிப்புகள் தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!” என பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

விழுப்புரம் மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
செந்தில் பாலாஜி: ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். முன்னதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சூழலில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, “மருத்துவக் காரணத்தை வைத்து ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது” எனக் கூறித் தள்ளுபடி செய்திருக்கிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: இன்று தீர்ப்பு!
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். முன்னதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்தச் சூழலில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் 45-வது பிரிவு பொருந்தாது எனத் தெரிவித்தார். வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது. அதன்படி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவின் மீது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை 10;30 மணிக்குத் தீர்ப்பளிக்கவிருக்கிறார்.