2020 ஆம் ஆண்டில், மெட்டா நிறுவனம் டிக்டோக் செயலிக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ரீல்ஸை இன்ஸ்டாகிராமின் ஒரு பகுதியாக மாற்றியது. அது டிக்டோக் செயலியை விட அதிகமான வரவேற்பை மக்களிடம் பெற்றது. இப்போது இன்ஸ்டாகிராம் முகமாக பலர் மாறியிருக்கிறார்கள். மக்களை கவரும் வகையில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான ரீல்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்படுகின்றன. அப்படி, வேடிக்கையான ரீல் வீடியோக்களைப் பார்த்த பிறகு, சில வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்ய நீங்கள் நினைத்தால், இப்போது ஈஸியாக டவுன்லோடு செய்யலாம்.
இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பதிவிறக்க, குறிப்பிட்ட வீடியோவின் லிங்கை காபி (Copy) செய்து கொள்ளுங்கள். இதுவரை மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் இணையதளங்களின் உதவியை நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால், அவ்வாறு இனி செய்யத் தேவையில்லை. இந்த எளிய தந்திரம் உங்களுக்குத் தெரிந்தால், இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்தே ரீல்களைப் பதிவிறக்கலாம். இந்த தந்திரம் Android மற்றும் iOS இயங்குதளங்களில் வேலை செய்கிறது.
இன்ஸ்டாகிராம் ரீல்களை டவுன்லோடு செய்யும் வழிமுறை
– முதலில், உங்கள் Android அல்லது iOS ஸ்மார்ட்போனில் Instagram செயலியை ஓபன் செய்யுங்கள்
– இப்போது நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீலுக்குச் செல்லவும்.
– இங்குள்ள ஷேர் ஐகானைத் தட்டிய பிறகு, Add reel to your story விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
– இதற்குப் பிறகு, ரீல் வீடியோவின் முன்னோட்டத்தை முழுத் திரையில் பெரிதாக்கினால், அங்கு தெரியும் மூன்று-புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்
– இங்கே நீங்கள் சேமி விருப்பத்தைத் கிளிக் செய்வதன் மூலம் வீடியோவைச் சேமிக்க முடியும்.
– இதற்குப் பிறகு, ரீல்ஸை பகிர தேவை இருக்காது, ரீல் வீடியோ உங்கள் தொலைபேசியின் கேலரியில் இருக்கும்
பொது கணக்குகளில் இருந்து பகிரப்பட்ட ரீல் வீடியோக்களை மட்டும் பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பத்தை Instagram வழங்குகிறது. தனிப்பட்ட கணக்குகளிலிருந்து பகிரப்பட்ட ரீல்களைப் பதிவிறக்குவதற்கான விருப்பம் பயனர்களுக்கு வழங்கப்படவில்லை. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில், பயனர்களுக்கு விரைவில் ஷேர் மெனுவிலிருந்தே பதிவிறக்க விருப்பம் வழங்கப்படும். இருப்பினும், பிற பயனர்கள் தனது வீடியோவைப் பதிவிறக்கலாமா வேண்டாமா என்பதை உருவாக்கியவராலேயே தீர்மானிக்க முடியும்.