வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு:பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 62 ரன்னில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியில் ஷாதப் கானுக்குப்பதில் சுழற்பந்துவீச்சாளர் உஸ்மா மிர் இடம்பிடித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், மிட்சல் மார்ஷ் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் பாக்., பவுலர்களின் பந்துவீச்சை விளாசி தள்ளினர். வார்னரும், மார்ஷூம் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினர். 31 ஓவர்களில் ஆஸி., அணி விக்கெட் இழப்பின்றி 214 ரன்கள் எடுத்தது. வார்னர் 163 ரன்களும், மிட்சல் மார்ஷ் 121 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 50 ஓவரின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன் குவித்தது.பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹாரிஸ் ராப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
368 ரன் வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன் மட்டுமே எடுத்து 62 ரன்னில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக் 64 ரன்னும் இமாம் உல் ஹக் 70 ரன்னும் சேர்த்து நல்ல துவக்கம் தந்தனர். ரிஸ்வான் 46 ரன்களும் ஷகீல் 30 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இந்நிலையில் 305 ரன்னுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 62 ரன்னில் அபார வெற்றி பெற்றது. ஆஸி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் மற்றும் ஸ்டோயினிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement