ரோம்: ஐரோப்பிய நாடான இத்தாலியில், ‘பிரதர்ஸ் ஆப் இத்தாலி’ கட்சியைச் சேர்ந்த ஜார்ஜியா மெலோனி, 45, பிரதமராக உள்ளார்.
இத்தாலி வரலாற்றின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
மெலோனி, ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவுடன் திருமணம் செய்யாமல், கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், காதலர் ஆண்ட்ரியாவை பிரிவதாக மெலோனி நேற்று அறிவித்தார். இது குறித்து தன் சமூக வலைதள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த 10 ஆண்டுகள் நீடித்த ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவுடனான என் உறவு முடிவடைகிறது. எங்கள் பாதைகள் சில காலமாக வேறுபட்டு விட்டன.
அதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தன் தாயை நேசித்து, தந்தையை நேசிக்கும் 7 வயது சிறுமியை எப்படியும் பாதுகாப்பேன். என் மகள் தந்தையுடன் செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க தயார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளில் ஏற்கனவே சிக்கிய ஆண்ட்ரியா, சமீபத்தில் ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அது மட்டுமின்றி மற்றொரு நிகழ்ச்சியில் சக பெண் ஊழியர்களுடனான பாலியல் தொடர்பு குறித்தும் அவர் பேசினார். இதையடுத்து, பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆண்ட்ரியாவை பிரிவதாக அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement