தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும்| The UN should intervene in the issue of Tamil Nadu fishermen crossing the border: Sri Lankan Maritime Industry Minister Douglas Devananda!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்களை தடுக்க ஐநா சபை தலையிட வேண்டும் என இலங்கை அரசு கூறியுள்ளது.

இதை அந்நாட்டு அரசின் சார்பில் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த தகவலை இன்று முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபடுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்றும் இதை தடுக்க வேண்டும் என கொழும்பில் உள்ள ஐநா சபை பிரதிநிதியிடம் அமைச்சர் தேவானந்தா கூறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பிரச்சனை தொடர்பாக, ஐநா சபை பிரதிநிதி புதுடில்லியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று உறுதி அளித்துள்ளார் என்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் பிரச்சனைகளை தாண்டி இந்திய மீனவர்களின் அத்துமீறல் மிகப்பெரும் பிரச்சனையாக நாட்டில் உருவெடுத்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபடும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தும் வருகின்றனர்.

இதனால், வடக்கு கடலில் பதற்றம் நிலவுகின்றது. மன்னார், நெடுந்தீவு மற்றும் கச்சதீவுக்கு அருகாமையில் 3 வெவ்வேறு இடங்களில் ஐந்து விசைப்படகுடன் 27 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள ஒரு சில தினங்களில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த பிரச்சினையை ஐநா சபை வரை கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.