நமோ பாரத் ரயில் சேவை இன்று துவக்கம்| Prime Minister Narendra Modi: Namo Bharat train service starts today

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: புதுடில்லியில் பிரதமர் மோடியால் இன்று துவங்கப்படும் பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையான, அதிவேக மெட்ரோ ரயில்களுக்கு, ‘நமோ பாரத்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நம் நாட்டின் ரயில் சேவையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் ஒரு பகுதியாக அதிவேக ரயிலாக, ‘வந்தே பாரத்’ உள்ளது. இந்த ரயில் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.

இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ., வேகம் செல்லும் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

இந்த ரயில்களுக்கு ‘நமோ பாரத்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் ரயில் சேவை, என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகள் முழுதும் உள்ளடக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக, புதுடில்லி, காஜியாபாத், மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த பிராந்திய விரைவு போக்குவரத்து சேவை இன்று துவக்கப்படுகிறது.

இது காசியாபாத், குல்தார் மற்றும் துஹாய் நிலையங்கள் வழியாக சாஹிபாபாதை, துஹாய் டிப்போவுடன் இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.