உயிரிழந்த பாதுகாப்புப் படைவீரர்களின் நினைவான பொப்பி தினத்தினை முன்னிட்டு பாராளுமன்றத்தில் (18) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இதற்கமைய இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தனவுக்கு பொப்பி மலல் அணிவிக்கப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து பிரதமர் குறித்த சங்கத்துக்கான நிதி ஒத்துழைப்பை வழங்கினார்.
அதன் பின்னர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஆகியோருக்கும் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
முதலாவது மற்றும் இரண்டாவது உலக யுத்தங்கள், இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரை நினைவுகூறும் நோக்கில் பொப்பி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நிதியுதவி ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படையினரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும்.
இச்சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவ பாதுகாப்புப் படைவீரர்கள் சங்கத்தின் செயலாளர் லெப்டினட் கேணல் அஜித் சியம்பலாபிட்டிய, பொருளாளர் மேஜர் பி.கே.எஸ் சாந்திலால் கம்கானம்கே, பாதுகாப்புப் படையினரின் பொப்பி மலர் குழுவின் தலைவர் பிரிகேடியர் ஹேமந்த லியனகே மற்றும் அதன் உறுப்பினர்களான கப்டன் ரி.எம்.எச்.மடுகல்ல, ஏ.பத்மசிறி மற்றும் கே.எல்.எஸ்.ஜயவிரு, ஆர்.பி ஜயதிஸ்ஸ, ஐ.டி.ஆர்.ஏ.பத்மினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.