புதுச்சேரி, 05 அக்டோபர் 2023, விநாயக கார்கினோஸ் புற்றுநோயியல் நிறுவனத்தை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
இதுகுறித்து விநாயகா மிஷன் குழுமத்தின் வேந்தர். Dr. S. கணேசன் அவர்கள் கூறுகையில், ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கடந்த 23 ஆண்டுகளாக சிறப்பான முறையில் மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வருகிறது. புதுச்சேரி மக்களுக்கு சென்னை, மும்பை, டெல்லி- க்கு நிகரான மருத்துவ சேவை வழங்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், சுமார் 2 லட்சம் சதுர அடியில், 400 படுக்கை வசதிகள் கொண்ட, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயர்ரக பல்நோக்கு மருத்துவமனை, இதயம்,கல்லிரல், சீறுநீரகம் போன்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை ஏப்ரல் 2024லில் மக்கள் பயன்பாட்டிருக்காக வரவிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் ஒரு உலக தரம் வாய்ந்த “புற்றுநோய் சிகிச்சை மையம்” ஒன்றையும், கார்கினோஸ் என்ற புகழ்பெற்ற நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளோம்.. கார்கினோஸ் ஹெல்த்கேர் என்பது இந்தியாவில் புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிதல், சிகிச்சை வழங்குதல் மற்றும் இந்தியாவில் பொதுவான புற்றுநோய்களின் புதிய நுண்ணறிவுகளை கண்டறிவதற்கான நோக்கத்துடன் இயங்கும் தொழில்நுட்பம் சார்ந்த புற்றுநோயியல் தளமாகும். இந்த நிறுவனம் டாடா குழுமம், ரிலையன்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் மேயோ கிளினிக் போன்ற தலை சிறந்த நிறுவனங்களோடு இணைந்து இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பட்டு வந்தாலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், தமிழகத்திலும் முதல் முறையாக “விநாயகா மிஷன் குழுமத்தின் சீரிய முயற்சியினால், கார்க்கினோஸ் நிறுவனத்துடன் இணைந்து வீ-காய் (VKOI – VINAYAKA KARKINOS ONCOLOGY INSTITUTE) ” என்ற பெயரில் சேவையை தொடங்குகிறது.
இதுகுறித்து மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்கள் கூறுகையில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி இந்தியாவில் ஒன்பது பெயரில் ஒருவருக்கு புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளது மற்றும் புற்று நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ செலவு மற்ற எந்த சிகிச்சையை காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், புற்றுநோயை அதன் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.
இந்த உயர்ந்த சேவையின் துவக்கமாக புதுச்சேரி அரசோடு இணைந்து, 1 லட்சம் மக்களுக்கு “இலவச புற்றுநோய் பரிசோதனை” செய்யப்பட உள்ளது.. இதில் நாள் ஒன்றிற்கு சுமார் 160 பொதுமக்கள், மாதத்திற்க்கு சுமார் 4166 பொதுமக்கள் என்ற விகிதத்தில் 2 வருட காலத்திற்குள் நிர்ணையிக்கப்பட்ட 1 லட்சம் மக்களை பரிசோதிக்க உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ஏறத்தாழ புதுச்சேரி மக்கள் தொகையின் 12 முதல் – 14 சதவீத மக்கள் பயன் பெறுவார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் கண்டுபிடிக்கபடும் புற்றுநோய், ஏறத்தாழ 30-40% சதவீத சிகிச்சை செலவை மிச்சப்படுத்தும் என்பதாலும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை துவங்குவதன் மூலம் சிகிச்சையின் வெற்றி சதவீதமும் அதிகரிக்கும் என்பதாலும் இந்த “இலவச புற்றுநோய் பரிசோதனை” புதுச்சேரி மக்களுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் செயலாக இருக்கும்.
அவருடன்ஆறுபடைவீடுமருத்துவக்கல்லூரி வேந்தர். Dr. S. கணேசன், விநாயகமிஷன்குழுமத்தின் இயக்குனர் Dr. அனுராதாகணேசன், போர்டுமெம்பர் திரு.சுரேஷ்சாமுவேல், டீன், ப்ரொவோஸ்ட் Dr. P.F.கோட்டூர், Dr. ராகேஷ்சேஹ்கள், Dr. வினோத்பிரேம்சிங், பேராசிரிய