யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்டோஸ்(Mandous) புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் ஒரு மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னாா் மெசிடோ நிறுவனத்தினால் ஊர்காவற்றுறை, நெடுந்தீவு , வேலணை, தெல்லிப்பழை , பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 52 மீனவர்களுக்கு 45000/= பெறுமதியா வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், (மன்னாா்)மெசிடோ நிறுவன பணிப்பாளர் , ஒருங்கிணைப்பாளர், கள ஒருங்கிணைப்பாளர், உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.