வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் விதிகளை மீறிய 20 லட்சம் வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வீடியோ வெளியிடுவதற்கான தங்கள் கொள்கை மற்றும் விதிகளை பின்பற்றாத வீடியோக்களை தொடர் கண்காணிப்பு மூலம் நீக்கி வருவதாக கூகுள் கூறியுள்ளது. இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை யூடியூப், கூகுள் பே உள்ளிட்டவை பின்பற்றுகிறது. இந்த ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட மற்றும் கொள்கை வழிகாட்டுதலின் படி பதிவேற்றம் செய்யப்படாத, விதிகளை மீறிய 20 லட்சம் வீடியோக்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
டில்லியில் நடைபெற்ற ‘கூகுள் பார் இந்தியா 2023’ நிகழ்வின்போது யூடியூப் இந்தியாவுக்கான அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைத் தலைவரான மீரா சாட் இதனை தெரிவித்தார். மீரா சாட் மேலும் கூறுகையில், ”யூடியூபின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, வரும் மாதங்களில் இந்தியாவில் ‘வாட்ச் பேஜ்’ என்ற புதிய அம்சத்தையும் யூடியூபில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இந்த அம்சம் பயனர்களுக்கு நம்பகமான செய்திகளை மட்டுமே பரிந்துரைக்கும்” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement