வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் :வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கான, ‘எச்1பி’ உள்ளிட்ட, ‘விசா’ வழங்கும் நடைமுறை செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்க அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. இதற்கான புதிய விதிகள் நாளை வெளியிடப்பட உள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.இதில், உயர் தொழில்நுட்பப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக, எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்துவதில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இந்நிலையில், எச்1பி உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்கள் வழங்கும் நடைமுறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், அதில் சில திருத்தங்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை மேற்கொண்டுள்ளது. தற்போது வரைவு விதிகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய விதிகள், நாளை வெளியிடப்பட உள்ளன. தற்போது எச்1பி விசாவுக்கான ஆண்டு உச்சவரம்பான, 60 ஆயிரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
அதே நேரத்தில் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், நடைமுறைகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோல, உயர்கல்வி படிக்கும் மாணவருக்கான, எப்௧ உள்ளிட்ட விசா நடைமுறைகளிலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விசா நடைமுறையை மேம்படுத்தவும், மோசடி களை தடுக்கவும் இந்த திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement