துபாய்,ஐக்கிய அரபு எமிரேட்சில், ‘எமிரேட்ஸ் பாஸ்ட் 5 டிரா’ லாட்டரியில், தமிழகத்தை சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன் என்பவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதன் வாயிலாக அவருக்கு, 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 5.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
தமிழகத்தின் திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர், மகேஷ் குமார் நடராஜன், 49. இவர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், 2019 முதல், நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அந்நாட்டில் பிரபலமான, ‘எமிரேட்ஸ் பாஸ்ட் 5 டிரா’ எனப்படும் லாட்டரியில் மகேஷ் குமார் நடராஜனுக்கு பரிசு கிடைத்தது. இதன் வாயிலாக அவருக்கு, 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும், 5.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இது குறித்து, மகேஷ் குமார் நடராஜன் கூறியதாவது:
இந்த நிகழ்வு, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். விளையாட்டில் வென்ற பணத்தை, என் மகள்களின் கல்வியில் முதலீடு செய்யவும், குடும்பத்தின் எதிர்காலத்திற்காக செலவழிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement