வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நவாராத்திரியையொட்டி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூஜை செய்து நடனமாடி மகிழ்ந்தார் அமெரிக்க தூதர் இரிக் கார்சிட்டி.
நாடு முழுதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டில்லியில் சித்ரரஞ்சன் பார்க் என்ற பகுதியில் நவாராத்திரி நிகழ்ச்சி ஒன்றில் இரிக் கார்சிட்டி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வந்தார்.
அப்போது துர்கை அம்மனுக்கு தீபாராதனை செய்து வழிபட்டார். அங்கு பெண்கள் சிலர் நடனமாடி கொண்டிருந்தனர்.அவர்களுடன் இணைந்து தானும் நடனமாடி மகிழ்ந்தார். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement