வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்: போக்குவரத்து விதிகளை பின்பற்றததால் நாட்டில் சாலை விபத்துக்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: நாட்டில் சாலைகளில் செல்பவர்களில் பெரும்பாலானோர் விதிகளை பின்பற்றுவதில்லை.18 வயது முதல் 34 வயது உடைய இளைஞர்களே அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய ஐந்து லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. சாலை விபத்தால் சுமார் 1.5 லட்சம் பேர் மரணம்அடைகின்றனர். 3.5 லட்சம் பேர் வரையில் கை ,கால்கள் பாதிக்கப்பட்டு ஊனமடைகின்றனர். இதனால் அவர்களை நம்பி உள்ள குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து விதிகளைபின்பற்ற தவறியதால் விபத்து எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலைகளை செப்பனிடும் கொள்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என கட்கரி கூறி இருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement