வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெல் அலிவ்: ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள தனது 27 வயது காதலியை மீட்டு தரும்படி, இஸ்ரேலில் காதலன் ஒருவர், கோரிக்கை விடுத்துள்ளார். ” நிச்சயம் அவள் திரும்பி வருவாள் ” என காதலன் ஆலன் நம்பிக்கை தெரிவித்தார்.
இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே தாக்குதல் நீடித்து வருகிறது. இசை விழா ஒன்றில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் 27 வயதுடைய பெண் ஒருவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினார். ஆனால் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் அந்த பெண்ணை தூக்கி சென்றனர். இந்த வீடியோ காட்சி வைரலானது.
இந்த வீடியோ பார்த்த அந்த பெண்ணின் காதலன் கவலை அடைந்தார். காதலியை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய காதலர் நோவாம் ஆலன் (வயது 24) அதிகாரிகளை விடாமல் சந்தித்து பேசி வருகிறார். தனது காதலியை மீட்டு தரும்படி காதலன் ஆலன் வலியுறுத்தி வருகிறார்.
நிச்சயம் வருவாள்…!
இது குறித்து காதலன் ஆலன் கூறியிருப்பதாவது: பிணை கைதிகளுக்கு உணவு, நீர் மற்றும் மருந்துகளை கொடுக்க வேண்டும். நிச்சயம் அவள் திரும்பி வருவாள். முடிந்தவரை நாமும் அவர் திரும்புவதற்கான எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும். நானும் அதிகாரிகளை விடாமல் சந்தித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement