வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: நியூயார்கில் 66 வயதான சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்டு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்று(அக்.,23) உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன், சீக்கிய மதத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். சீக்கியர்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நியூயார்க் நகரில் சீக்கிய மதத்தை சேர்ந்த 19 வயது இளைஞர், டர்பன் அணிந்த படி பஸ்சில் பயணித்துள்ளார். அப்போது, அந்த பஸ்சில் பயணித்த கிறிஸ்டோபர் பிலிப்பெக்ஸ் என்ற 26 வயது மதிக்கத்தக்க இளைஞர், டர்பனை நாங்கள் அணிய மாட்டோம் எனக்கூறி அந்த இளைஞரை தாக்கினார்.
முகத்திலும், தலையிலும் தாக்கிய கிறிஸ்டோபர், டர்பனையும், மாஸ்க்கையும் அகற்ற முயற்சி செய்தார். அது முடியாததால் பஸ்சில் இருந்து இறங்கி சென்றார். இந்த சம்பவத்தில் சீக்கிய இளைஞருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் கிறிஸ்டோபர் பிலிப்பெக்சை கைது செய்தனர்.
2வது சம்பவம்
இந்நிலையில் 66 வயதான சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்டு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்று(அக்.,23) உயிரிழந்தார். இந்த சம்பவம் கார் விபத்து காரணமாக நிகழ்ந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது நியூயார்க்கில் சீக்கியர்களுக்கு எதிரான 2 சம்பவம் ஆகும். அமெரிக்காவில் சிக்கியர்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு நியூயார்க் பிரதிநிதி ஜெனிபர் ராஜ்குமார் ‛‛கடந்த ஏழு நாட்களில் மட்டும் சீக்கியர்களுக்கு எதிராக இரண்டு கண்டிக்கத்தக்க குற்றங்கள் நடந்துள்ளன. அவை நம் அனைவரையும் பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளன” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement