அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

  • அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்டத் தொழில் முயற்சி அமைச்சர் ஒருவரும் நியமனம்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், விவசாய அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுகாதார அமைச்சராக வைத்தியர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய அமைச்சிற்கு மேலதிகமாகவே பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதோடு கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக வைத்தியர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அமைச்சரவை அந்தஸ்தற்ற தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.