வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவ படையின் பீரங்கி, எகிப்து எல்லைப் பகுதியை நோக்கி தவறுதலாக தாக்கியுள்ளது. இதற்கு இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே 17வது நாளாக போர் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுகள் வைத்துள்ளனர். தெற்கு இஸ்ரேல் படையினர் காசாவை ஒட்டியுள்ள இஸ்ரேல் – எகிப்து எல்லைப் பகுதியான கேரேம் ஷலோம் பகுதியில் ஹமாஸ் படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக எகிப்து ராணுவ எல்லைப்பகுதியை நோக்கி சுட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘சிலமணிநேரங்களுக்கு முன்பு இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக கேரேம் ஷலோம் எல்லையையொட்டிய எகிப்து ராணுவ எல்லைப் பகுதியை நோக்கி தாக்கியுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement