
ஜப்பான் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் திரைப்படம் 'ஜப்பான்'. அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த வருட தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகிறது.
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது தொடர்ந்து தற்போது இதன் பிஸ்னஸ் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் ஆந்திரா, தெலுங்கானா தெலுங்கு பதிப்பு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளனர் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்து வெளிவந்த 'சர்தார்' படத்தை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.