சென்னை: சென்னை புழல் சிறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம், வேளச்சேரியில் உள்ள அரசு வாகனங்கள் பழுது நீக்கும் மையத்தில், பழுது பார்க்கும் பணிக்கு விடப்பட்டிருந்தது. பழுது பணி முடிவடைந்ததும், கடந்த 19-ம் தேதி புழல் சிறையில் காவலராக பணிபுரியும் ஹரிஹரன் (48), ஆம்புலன்ஸ் வாகனத்தை வேளச்சேரியில் இருந்து புழல் சிறைக்கு ஓட்டிச் சென்றார். புழல் லட்சுமிபுரம் அருகே வந்தபோது, ஆம்புலன்ஸ் எதிரே வந்த கார் மீது மோதியது.
இதில், ஹரிஹரனும், காரை ஓட்டி வந்த ஜெயபாலனும் காயம் அடைந்தனர். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் ஹரிஹரன் மது போதையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி வந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து ஹரிஹரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.