சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கலைவாணன் என்ற இளைஞரை, முன்விரோதம் காரணமாக பி.வி.காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்ராஜ் கடந்த 2017 செப்டம்பரில் கற்கள் மற்றும் மூங்கில் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இருவரையும் எம்கேபி நகர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை 16-வது கூடுதல் அமர்வு நீதிபதிகு.புவனேஷ்வரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போதுகாவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்துநீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.2,000 அபராதம் விதித்தார்.