வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: விக்கிபீடியா என்ற இணையதளத்தின் பெயரை டிக்கிபீடியா என ஓராண்டுக்கு பெயர் மாற்றினால் அந்த தளத்திற்கு ஒரு பில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தகவல் களஞ்சியம் என அறியப்படும் ‘விக்கிபீடியா’ இணையதளம் இலவசமாக தகவல்களை அளித்து வருகிறது. இந்த இணையதளம் வாசகர்களிடம் நன்கொடைகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் (தற்போது எக்ஸ்) சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், விக்கிபீடியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக கூறியுள்ளார். அதற்கு ஒரு குசும்பான கண்டிஷனும் போட்டுள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க், ”விக்கிபீடியா தனது பெயரை ‘டிக்கிபீடியா’ என மாற்றினால் ஒரு பில்லியன் டாலரை நன்கொடையாக அளிக்கிறேன்.” எனக் கூறினார். இதற்கு பயனர் ஒருவர், ‘விக்கிபீடியா, பெயரை மாற்றுங்கள். எலான் மஸ்க்கிடம் இருந்து பணம் வந்தவுடன் மீண்டும் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்’ என பதிவிட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க், ‘நான் ஒன்றும் முட்டாள் அல்ல, குறைந்தது ஓராண்டுக்கு இந்த பெயர் மாற்றம் இருக்க வேண்டும்’ என்ற கண்டிஷனுடன் பதிலளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement