280 கி.மீ., கொடுக்கும் முரட்டு பைக்… பெட்ரோல் வண்டிகளை தூக்கிச் சாப்பிட வரும் EV பைக்!

Honda Activa Electric: பெட்ரோல், டீசல் ஆகிய எரிப்பொருள் மூலம் இயங்கும் கார், பைக்குகளைவிட மின்சாரத்தில் இயங்கும் இ-சாதனங்கள்தான் எதிர்காலம் என்பது தொடர்ந்து உலகளவில் சொல்லப்பட்டு வருகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் மின்சாரத்தில் இயங்கும் கார் மற்றும் பைக்குகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துகின்றன. மேலும் அதனை மேம்படுத்தி விற்பனையையும் அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், பிரபல ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை (EV Two-Wheelers) தயாரிக்கும் முனைப்பில் இருப்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய தகவல், அடுத்த 5 ஆண்டுகளில் ஹோண்டா 10 புதிய EV பைக்குகளை கொண்டு வரவுள்ளதாக கூறுகிறது.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக்

மேலும், நடப்பு அக்டோபர் மாதம் முதல் அடுத்தாண்டு செப்டம்பருக்குள் 10 மாடல்களில் இரண்டு EV பைக்குகளை ஹோண்டா அறிமுகப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. அதில் முதன்மையான ஒன்று ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் (Honda Activa Electric). அந்த வகையில், ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக் குறித்து இங்கு காணலாம். 

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக் சக்திவாய்ந்த மோட்டார், பேட்டரி மற்றும் அதன் செயல்பாட்டை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், ஆட்டோமொபைல் வல்லுநர்கள் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக் குறித்து கூறும்போது, இந்த பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 280 கி.மீ.,க்கும் அதிகமான ரேஞ்சை கொடுக்கும் என தெரிவிக்கின்றனர். 

என்னென்ன எதிர்பார்ப்பு?

இதில் டிஜிட்டல் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெய்மண்ட் அமைப்புடன் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கும் வகையில் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி கூடுதல் தொழில்நுடப்ங்களான எழுதும் வசதி, மியூஸிக் பிளேயர், ஸ்பீக்கர், ரிமோட் அன்லாக், யூஎஸ்பி சார்ஜர், அலாய் சக்கரங்கள், டிஸ்க் பிரேக், டெலிஸ்கோப் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலையும், வெளியீடும்…?

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக்கின் விலை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல் துறையில் கொடி பறக்கும் ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் பைக்கை நடுத்தர வர்க்கத்தினர் எளிதாக வாங்கும் வகையில் ஓரளவுக்கு மலிவான விலையில் கொண்டுவர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது அறிமுகப்படுத்தப்படும் ஆண்டில் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் பைக்குகளை தயாரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.