மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் தென் ஆப்ரிக்கா 149 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்தது. தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் 174 ரன்கள் குவித்தார்.
383 ரன்கள் வெற்றி இலக்காககொண்டு அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்னுக்கு சுருண்டது. இதனையடுத்து தென்ஆப்ரிக்கா அணி 149ரன்னில் அபார வெற்றி பெற்றது. வங்கதே அணியின் மஹ்முத்துல்லா சதம் (111) அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement