ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் விஜயதசமி விழாவில், பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன், 56, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் சரஸ்வதி வந்தனம் பாடிய அவர், தொடர்ந்து பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டவுடன் ஏராள மானோர் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். அது உண்மையில் நெகிழ்வாக இருந்தது. மோகன் பகவத்தை மும்பையில் சந்தித்து, என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்தேன். அந்த சந்திப்பு உண்மையில் மறக்க முடியாத சந்திப்பாக அமைந்தது.
ஆர்.எஸ்.எஸ்., குறித்து நான் என்ன சொல்வது? அவர்களின் பணிகளை பார்த்து வணங்குவதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
அகண்ட பாரதம் என்ற நம் சித்தாந்தம், நம் பாரம்பரியம், கலாசாரத்தை கட்டிக்காப்பதில் அவர்களுக்கு இணை வேறு யாரும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
சங்கர் மகாதேவன் நெகிழ்ச்சி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement