மதுரை: தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு மதுரையை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் எம்.பூபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய தென்மண்டல நீச்சல் போட்டிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எஸ்எஸ்விஎம் பள்ளியில் அக்டோபர் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் மதுரை மகாத்மா குளோபல் கேட்வே பள்ளியில் பிளஸ் 2 மாணவன் எம்.பூபாலன், 19 வயதிற்குட்பட்ட பிரிவில் 3 தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 4 பதக்கங்கள் வென்றார். இதில் 100 மீட்டர் பட்டர் பிளை பிரவில் தங்கம், 50 மீட்டர் பட்டர் பிளை பிரவில் தங்கம்,100 மீட்டர் ஃப்ரி ஸ்டைல் பிரவில் தங்கம், 50 மீட்டர் ஃப்ரி ஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.
இதன் மூலம் நவம்பர் 4 -ம் தேதி ஹரியாணா மாநிலத்தில் தொடங்கும் தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கிய ராஜ், மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர்
கே.ராஜா, மதுரை மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், பயிற்சியாளர் அரவிந்த் ஆகியோர் பாராட்டினர்.