ஸ்டாண்ட் அப் காமெடிகளுக்கு மக்களின் மத்தியில் சமீபத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

காசு கொடுத்து ஸ்டாண்ட் அப் காமெடியை பார்க்க வருபவர்களை என்டர்டெயின் செய்து அனுப்ப வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளை ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் செய்வதுண்டு.
ஆனால் ஸ்டாண்ட் அப் காமெடியனான விதுஷி ஸ்வரூப் பாலியல் தொழிலை “கூல் புரொஃபஷன்’ என அழைத்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இது குறித்து இவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனங்களைப் பெற்று வருகிறது.
அவர் அந்த வீடியோவில் பாலியல் தொழில் என்பது மிகவும் கூலான தொழில். வேறு எந்த வேலையிலும் முன் அனுபவம் இருந்தால் வரவேற்கப்படுவார்கள். ஆனால், பாலியல் தொழிலைப் பொறுத்தவரையில் அப்படியில்லை என நையாண்டி செய்திருக்கிறார். இவரின் பேச்சைக் கேட்டு பலரும் சிரிக்கின்றனர்.

மற்றொரு புறம் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. “இது ஒரு வெட்கக்கேடான பேச்சு… படிக்காத முட்டாள்களால் மட்டுமே இப்படி பாலியல் தொழிலை கேலி செய்ய முடியும்.
குழந்தை கடத்தல், ஹியூமன் டிராஃபிக்கிங் மற்றும் வறுமை பற்றி அறிய அவளுக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால், தன்னுடைய பேச்சுக்கு மிகவும் வெட்கப்படுவாள்” என்று விமர்சித்து வருகின்றனர்.