வாட்ஸ்அப் சேனல் வச்சிருக்கீங்களா… வருகிறது வெயிட்டான அப்டேட் – முழு விவரம்

Whatsapp Channel Updates: வாட்ஸ்அப் செயலி சில நாள்களுக்கு முன் சேனல்கள் (Whatsapp Channel) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. பயனர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் வாட்ஸ்அப் சேனல்களை இன்னும் மேம்படுத்தும் வகையில் பல அப்டேட்களை கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

அந்த வகையில், வாட்ஸ்அப் சேனல்களை இன்னும் சிறப்பானதாக மாற்ற மெட்டா புதிய இரண்டு அம்சங்களை அதில் கொண்டு வந்துள்லது. அதில் ஒரு அப்டேட் பீட்டா வெர்ஷன் பயனர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது மற்றும் மற்றொரு அப்டேட் இன்னும் வளர்ச்சி கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகிறது. மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் சேனலில் கொண்டு வர உள்ள இரண்டு அப்டேட்கள் குறித்தும் இதில் காணலாம். 

வாட்ஸ்அப் சேனல்களின் புதிய அம்சம்

வாட்ஸ்அப்பின் அப்டேட் குறித்து தகவல் அளிக்கும் WABetainfo வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், சேனல்களின் இரண்டு புதிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது முதல் அப்டேட்டிஸ் வாட்ஸ்அப் சேனலில் நீங்கள் பதிவிடும் செய்திக்கு ரியாக்சன் கொடுப்பவர்களை தனித்தனியே காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. All மற்றும் Contacts என இரண்டு பிரிவுகள் இருக்கும். அதன் உதவியுடன், பயனர்கள் தங்கள் பதிவுக்கு ரியாக்சன் அளிக்கும் பயனர்கள் யார் யார் என்பதை பார்த்துக்கொள்ளலாம்.

வெளியாகி உள்ள ஸ்கிரீன்ஷாட்டின் படி, வரும் அப்டேட்டில் ரியாக்சன்களை காண அதன் பட்டியலைத் திறக்கும் போது, All மற்றும் Contacts என்ற இரண்டு ஆப்ஷங்கள் வரும். All பிரிவில், சேனல்களுடன் தொடர்புடைய அனைத்து நபர்களின் ரியாக்சனும் தெரியும். அதே நேரத்தில், Contacts பிரிவில் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கான ரியாக்சனை பார்க்க முடியும். தற்போது, ஆண்ட்ராய்டு 2.23.23.3 அப்டேட்டிற்காக வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவிய சில பீட்டா பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கிறது. இது விரைவில் அனைவருக்கும் கொண்டு வரப்படும்.

வாய்ஸ் மெசேஜ்

இது தவிர, வாட்ஸ்அப் அதன் சேனல்கள் வசதியில், வாய்ஸ் மெசேஜ் செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களுக்கான மற்றொரு புதிய அம்சத்தை உருவாக்குகிறது. இந்த அம்சத்தின் பெயரே இந்த வசதி எதற்கு என்பதை உணர்த்திவிடும். இந்த அம்சத்தின் உதவியுடன், நீங்கள் சேனல்களில் குரல் வழி செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களைப் பகிர முடியும்.

ஆண்ட்ராய்டு 2.23.23.2 அப்டேட்டிற்கான வாட்ஸ்அப் பீட்டாவில் இருந்து வாட்ஸ்அப் சேனல்களின் வரவிருக்கும் இந்த அம்சம் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன. WABetainfo மூலம் வெளியான ஸ்கிரீன்ஷாட்களின்படி, வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அப்டேட்டுடன், அதன் சேனல்களில் குரல் செய்திகளைப் பகிர முடியும். இந்த இரண்டு அம்சங்களும் WhatsApp சேனல்களை இன்னும் பயனுள்ளதாகவும் செய்தியை எளிமையாக பகிரும் வகையிலும் மாற்றும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.