சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்துக் கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் […]
