வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், மிட்சல் மார்ஷ் ஜோடி துவக்கம் தந்தது. வார்னர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் மிரட்டிய மேக்ஸ்வெல், உலக கோப்பை அதிவேக (40 பந்து) சதம் விளாசி சாதனை படைத்தார். இவர் 106 ரன்னில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 399 ரன் குவித்தது.
வெற்றி தேவையான 400 ரன்கள் கடினமான இலக்குடன் களம் இறங்கிய நெதர்லாந்து அணி துவக்கத்திலேயே திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 21 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக விக்ரமத்சிங் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement