ஐக்கிய நாடுகள்: இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள காசாவுக்கு மருந்து, உணவு என 38 நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஐ.நா., பாதுகாப்பு சபையில் நடந்த விவாதத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ரவிந்திரா கூறியதாவது: காசா பகுதி மக்களுக்கு மருந்து, உணவு உள்ளிட்ட 38 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அமைதிக்கு தேவையான சூழ்நிலைகளை உருவாக்கவும், பதற்றம் மற்றும் வன்முறையை தணிக்கவும் நேரடி பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்குவதற்கு சம்பந்தப்பட்டவர்களை இந்தியா கேட்டுக் கொள்கிறது.
அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது, மனிதாபிமான நிலைமையை மோசமாக்கி உள்ளதை காட்டுகிறது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பலவீனத்தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement