கொப்பால் : சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து, 14 மாத ஆண் குழந்தை பலியானது.
கொப்பால் காரடகி பசவண்ணா முகாமில் வசிப்பவர் சிவானந்த். இவரது மனைவி ஷில்பா. இந்த தம்பதிக்கு விஜயேந்திரா என்ற 14 மாத ஆண் குழந்தை இருந்தது. நேற்று காலை வீட்டின் முன் நின்று, விஜயேந்திரா விளையாடி கொண்டு இருந்தது.
எதிர்பாராதவிதமாக சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து பலியானது. சிறிது நேரம் கழித்து ஷில்பா வெளியே வந்து குழந்தையை தேடினார். சாக்கடை கால்வாய்க்குள் எட்டிப் பார்த்த போது, குழந்தை இறந்தது தெரிந்தது. காரடகி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement