கலபர்கி காங்கிரசுக்குக் கர்நாடகம் மாநிலம் ஏ டி எம் போல உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியதற்கு கார்கே பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சி செய்து வருகிறது. இங்கு முதல்வராக சித்தராமையா பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜு கார்கே கலபர்கியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். செய்தியாளர்கள் அவரிடம், கர்நாடகா மாநிலம் காங்கிரஸ் அரசுக்கு ஏ.டி.எம். போன்றது என்ற பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து கேள்விகள் எழுப்பினர். கார்கே இதற்கு ”கர்நாடக முதல்வர் […]
