வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி: அயோத்தியில் 2024 ஜன.22-ல் நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு முறைப்படி இன்று (25 ம் தேதி) அழைப்பு விடுக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆக.,5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் வரும் 2024 ஜன.,22 ல், நடைபெற்ற உள்ள கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பினர் இன்று (25 ம் தேதி) பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். அதன் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அழைப்பிதழை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை காண்பது எனது அதிருஷ்டம் என பதிவேற்றியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement