புது டெல்லி; சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பாரத ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர்.
சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், ஆர்.ஜே.ரத்னாகர் மற்றும் அறங்காவலர்கள், எஸ்.எஸ்.நாகானந்த் மனோகர் ஷெட்டி மற்றும் துணைவேந்தர், எஸ்.எஸ்.எஸ்.ஐ.ஹெச்.எல்., பேராசிரியர். ராகவேந்திர பிரசாத் ஆகியோர் புது டெல்லி ராஷ்டிரபதி பவனில் பாரத ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர்.
சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மற்றும் சத்ய சாய் உயர்கல்வி நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அறங்காவலர்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு புட்டபர்த்தியில் சாய் மருத்துவமனைகள் மற்றும் சாய் கல்வி நிறுவனங்கள் வழங்கும் செயல்பாடுகள் மற்றும் இலவச சேவைகள் பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும், அவர்களின் சேவைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் சத்ய சாய் சேவாவில் நடந்த சாயி பஜனை நிகழ்வுகளில் தான் கலந்து கொண்ட அனுபவத்தையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement