சியாச்சின்: உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலைப் பகுதியில் பணியாற்றி வந்த அக்னிவீரர் (Agniveer) பணியின்போது உயிரிழந்தார். அவருக்கு இந்திய ராணுவம் மரியாதை செலுத்தியுள்ளது.
சியாச்சினில் பணியின் போது அக்னிவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லே-வை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் Fire and Fury படைப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்த அக்னிவீரரின் பெயர் கவாட் அக்‌ஷய் லக்ஷ்மண், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. அவரது மறைவுக்கு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே மற்றும் அனைத்துப் படை வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.