டெல்லி: ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்பட 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கன் ‘பங்கேற்பார்கள் என கோவில் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு அங்கு பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை உத்தர பிரதேச அரசு மேற்பார்வையிட்டு வருகிறது. முன்னதாக ராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். […]
