ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் ஆளுநரின் தனிச் செயலர் அளித்துள்ள புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் நேற்று நடைபெற்ற பெட்ரோல் பாட்டில் வீச்சில் தொடர்புடைய கருக்கா வினோத் என்ற தொடர் குற்றவாளி சம்பவ இடத்திலேயே தமிழக காவல்துறையினரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர […]
